இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
டெல்லி | மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் கண்டனப் பேரணி

#FarmBills2020 | #ModiGovt | #Centralgovt https://t.co/YNGGTvrnaU September 23, 2020 at 03:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீனா - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் - ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் - ஷி ஜின்பிங்

வர்த்தகம், தொழில்நுட்பம், ஹாங்காங் விவகாரம், ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை முஸ்லிம்களை சீனா நடத்தும் விதம் குறித்து குற்றச்சாட்டுகளினால் அமெரிக்கா - சீனா இடையே பதற்றம் அதிகரிப்பு. https://t.co/hjAMEkj9aC September 23, 2020 at 05:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம் நிறைவேறியது.

தொண்டு நிறுவனத்தைப் பதிவு செய்வோர் ஆதார் எண்களை வழங்குவது கட்டாயம் எனும் விதிமுறை கொண்ட அந்நியப் பங்களிப்பு ஒழுங்கு முறை திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. https://t.co/2EPD9UXjC5 September 23, 2020 at 10:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சட்டப்பேரவை திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாமல் நிராகரித்த கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு. https://t.co/8PlQbQeQXt September 23, 2020 at 10:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய கலாச்சாரத்துறையின் அறிஞர்கள் குழு மீது திமுகவின் மூத்த எம்.பியான திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசினார். அதில் அவரது ஆலோசனையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு பரிந்துரை. https://t.co/zc5hSjrs7s September 23, 2020 at 10:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் பெரியார் பஸ் நிலையம்: டிசம்பரில் திறப்பு

ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் மதுரை பெரியார் பஸ்நிலையம், வரும் டிசம்பரில் பஸ்கள் வந்து செல்வதற்கு திறக்கப்பட இருக்கிறது. https://t.co/Psx4aYjGDy September 23, 2020 at 10:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் நடைபெற்ற பிரதமர் கிஷான் திட்ட முறைகேடு தொடர்பாக மொத்தம் 13 மாவட்டங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 52 பேர் கைது. ரூ.61 கோடி மீட்கப்பட்டுள்ளது.

- திமுக எம்.பி வில்சன் கேள்விக்கு விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் https://t.co/8lv5jcdBJb September 24, 2020 at 09:10AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் அடுத்தடுத்து 3பேரை கத்தியால் தாக்கி வழிப்பறி: சிசிடிவி காட்சி மூலம் விசாரணை

சென்னையில் அடுத்தடுத்து 3பேரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு தப்பியவர்களை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் போலீஸார் தேடி வருகின்றனர். September 24, 2020 at 09:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: கேரள அரசு ஆலோசனை.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டரீதியாக போராடுவதற்கான வாய்ப்புகள் குறித்து சட்டத்துறையிடம்  கேரள அமைச்சரவை முடிவு கோரியுள்ளது. https://t.co/dMN1jid9UX September 24, 2020 at 01:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீனா- அமெரிக்கா பதற்றம்: புதிய பனிப்போருக்கு தயாராகிறதா உலகம்?

அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கத்திற்காக போட்டியிட்டுக் கொள்வது, ராணுவ மோதலுக்கு வழிவகுக்குமா?

மீண்டும் ஒரு பனிப்போர் அபாயம்; ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் கவலை தெரிவித்துள்ளார். https://t.co/kR0axOVuAD September 24, 2020 at 01:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
குஜராத் | அகமதாபாத் மணிநகரில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது. பள்ளியின் முழு செலவையும் தமிழக அரசு ஏற்கத் தயார்

- குஜராத் அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம். https://t.co/CwWfqiUxUk September 24, 2020 at 02:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், இந்தியாவுக்கான உயர் தொழில்நுட்பங்களை வழங்குவதாகக் கூறியுள்ள நிலையில், பிரான்ஸின் டசால்ட் நிறுவனமும், ஐரோப்பிய ஆயுதங்கள் தயாரிப்பு நிறுவனமான எம்பிடிஏ நிறுவனமும் இன்னும் வழங்கவில்லை

- மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர். https://t.co/kTvGZcreat September 24, 2020 at 07:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை

- மருத்துவமனை நிர்வாகம் தகவல் https://t.co/KqrvpQfFuv September 24, 2020 at 07:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அக். 1 முதல் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி

- தமிழக அரசு https://t.co/5b20xIk17W September 24, 2020 at 07:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
12000 ஆண்டுகள் பழமையான இந்திய கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்யும் குழுவில் தென்னிந்தியர்கள், சிறுபான்மையினர், பெண்கள் இல்லாத பாகுபாடு நிறைந்த குழுவாக இருப்பதால் அதை உடனடியாக கலைக்க கோரி குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம். https://t.co/7wZYJOsmpW September 24, 2020 at 07:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி மத்திய அரசு சட்ட மீறல்?

- சிஏஜி அறிக்கையில் தகவல் https://t.co/qhSCpNCszu September 25, 2020 at 10:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான செஸ் தொகை ரூ.47,242 கோடியை 2017-18 மற்றும் 2018-19-ல் இந்திய தொகுப்பு நிதியை (CFI-consolidated fund of India) பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாகவும் இதன் மூலம் மத்திய அரசே சட்டத்தை மீறியுள்ளதகாவும் இந்திய தலைமைத் தணிக்கைக் கணக்கரின் அறிக்கையில் தகவல். September 25, 2020 at 10:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பொருளாதார நெருக்கடி; இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் நிறுவனம்.

#HarleyDavidson | #EconomyCrisis https://t.co/6bH31drf2c September 25, 2020 at 10:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இன்று மதியம் 12.30 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

பீகார் சட்ட மன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#BiharElections2020 September 25, 2020 at 10:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பாடகர் எஸ்.பி.பி காலமானார்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் https://t.co/kdtvIAh7j3 September 25, 2020 at 01:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)