இளைஞர் இந்தியா
147 members
2.96K photos
8 videos
2.91K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
to view and join the conversation
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக எல்லைக்குள் நுழைந்து நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான தமிழ் பெயர்ப் பலகையை, கன்னட சலுவாலியா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் அடித்து உடைத்து அராஜகம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம். https://t.co/WngUxJJicT January 11, 2021 at 02:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாலை விபத்தில் சிக்கினார் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபடா நாயக்

கர்நாடகா மாநிலத்தில் அங்கோலா என்ற இடத்தில் அமைச்சர் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியது

அமைச்சரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. https://t.co/AOvaSia7PW January 11, 2021 at 10:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | பெண்களிடம் ஆபாசமாக பேசி, பேட்டி எடுத்து அதனை எடிட் செய்து தவறாக யூடுப்பில் பதிவேற்றியதாக 3 பேர் கைது.

Chennai Talks - Youtube சேனல் உரிமையாளர், தொகுப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை கைது செய்து சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை. https://t.co/nRH5ylQHs3 January 12, 2021 at 10:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வரும் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்

- தமிழக அரசு https://t.co/LvypXiEZAl January 12, 2021 at 10:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த இடைக்காலத் தடை

- உச்சநீதிமன்றம் January 12, 2021 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | 3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக போராடிவரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உச்சநீதிமன்றம் சார்பில் குழு அமைப்பு

எச்.எஸ். மன், பிரமோத் குமார் ஜோசி, அலோக் குலாட்டி, அனில் தவாண்ட் ஆகிய வேளாண் துறையை சார்ந்த நிபுணர்கள் குழுவில் இடம்பிடித்துள்ளனர். January 12, 2021 at 02:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை

காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொதுஇடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 நாட்கள் தடை

- தமிழக அரசு

#Pongal2021 | #pongalfestival January 12, 2021 at 03:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதமாக அரசியல்வாதிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

- பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம். https://t.co/ebVvkuFUhn January 12, 2021 at 03:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜாக் மாவின் அலிபாபா நிறுவனத்தையும் ஆன்ட் குழுமத்தையும் அரசுடமையாக்க சீன அரசு முடிவு !

அலிபாபா நிறுவனம் ஏகபோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சீன அரசு விசாரணை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. https://t.co/cwuwTfNeBz January 12, 2021 at 07:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | சிக்கன் ரைஸ்க்கு காசு கேட்டதால் மிரட்டல்

அமித்ஷா பி.ஏ.வுக்கு போன் அடிக்கவா, 1000 பேர் ரெடியா இருக்காங்க. மதக்கலவரம் வரும். கடை நடத்த முடியாது

திருவல்லிக்கேணியில் உள்ள உணவகத்தில் தன்னை பாஜக பகுதி செயலாளர் எனக்கூறி மிரட்டல் விடுத்த நபர்

- வைரலாகும் வீடியோ https://t.co/mwAjndCz8u January 12, 2021 at 11:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வாசகர்களுக்கு இனிய தை திருநாள் வாழ்த்துகள் 💐💐

#HappyPongal | #Pongal2021 https://t.co/43RgPZQhF3 January 14, 2021 at 12:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளை அவிழ்த்துவிடுவதில் மோதல்

- இருவருக்கு கத்திக்குத்து

#AvaniyapuramJallikattu | #Jallikattu2021 January 14, 2021 at 11:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | ஜல்லிக்கட்டு போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்தேன். ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறுவது தவறானது

- காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேட்டி
https://t.co/tGtwXUiMED January 14, 2021 at 05:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான 9வது சுற்று பேச்சுவார்த்தை தொடக்கம். https://t.co/ZX5K80enus January 15, 2021 at 02:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஞானதேசிகன் காலமானார்.

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் உடல்நகுறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். https://t.co/Bog8XXrmTo January 15, 2021 at 03:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அஞ்சல் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும்

- மத்திய அரசு

அஞ்சலக தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு குறித்து இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் மத்திய அரசு பதில். https://t.co/B33amHP4Qw January 15, 2021 at 03:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவில் புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்த உள்ள WhatsApp-ஐ தடுத்து நிறுத்த வேண்டும்.

தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்ய WhatsApp, Facebook & Instagram செயலிகளை தணிக்கை செய்ய வேண்டும், இல்லையேல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

- அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு (CAIT) https://t.co/pMSR3FihFd January 15, 2021 at 11:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீன பொருட்கள் கொள்முதல் செய்வதைக் குறைக்க தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், அரசு துறைகளுக்கு உத்தரவு.

பதவியில் இருந்து வெளியேற 3 நாட்களே உள்ள நிலையில், சீனா நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை. https://t.co/iSj0pMx3Si January 16, 2021 at 02:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
Netflix, Hotstar உள்ளிட்ட OTT தளங்களுக்கும், செய்தி வலைதளங்களுக்கும் சுய கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டம். January 16, 2021 at 09:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி

ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல இருப்பதாக விவசாயிகள் அறிவிப்பு. https://t.co/tLpcLW3UgW January 17, 2021 at 03:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)