Tamil Stories தமிழ் கதைகள்
5.64K subscribers
1 video
23 links
தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story
Download Telegram
கதை #S87
உண்மையான மாலை


ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.

“அம்மு. இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை.

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி “ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்” மாலை வாங்கி தரசொல்றேன். இது வேண்டாம்மா" என்றாள் அம்மா.

ஆனால் மகள், அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள். மகளுக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது. அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள் உடன் வைத்திருந்தாள்.

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள். பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா சொல்லியும் கூட கேட்கவில்லை. எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

மகள்வின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் மகளுக்கு படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “அம்மு. என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”

“ஓ. முடியாதுப்பா. நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா.” என்றாள்.

"பரவால்லை குட்டிம்மா. " என்று புன்னகையுடன் பதில் சொன்னார் அப்பா. இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “அம்மு. என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்” மகள்

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ. முடியாதுப்பா. நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க. முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ். அதமட்டும் நான் தர மட்டேன். ” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் மகள்.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவால்லை குட்டி.” என்றார் அப்பா. சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், அப்பா இரவு கதை சொல்ல வந்தபோது. மகள் ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து அப்பாவின் கைகளில் தந்தாள். அது பழசாகியும். சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட அப்பா, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். மகள் தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர். அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை தந்தார். "இதை உனக்கு தருவதற்காகத்தான்டா அம்மு. நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன். " என்றார் அப்பா.

இந்த தகப்பன் யாருமல்ல. நம் எல்லோருக்கும் தந்தையான இறைவன். அந்த குழந்தை தான் நாம். ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை. அத்தகைய போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான ஒன்றை நமக்கு பரிசளிப்பான்.

நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள். உறவுகள். போன்ற எது வேண்டுமானாலும் நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம். அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்.

ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன. அத்தகைய சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால். போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை.
@Tamilstory

Story List #SL02
கதை பட்டியல் 51 - 100
_______________________
கதை #S51 எது தண்டனை, எது பாராட்டு
கதை #S52 கண்ணாடி முன்னால்
கதை #S53 ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை
கதை #S54 எதிரொலி
கதை #S55 பிரச்சனைக்குத் தீர்வு
கதை #S56 ஒட்டகங்கள்
கதை #S57 இவ்ளோ தானா?
கதை #S58 கற்பனையான பிரச்சனை
கதை #S59 பதட்டமில்லாத சிந்தனை
கதை #S60 உட்கார்ந்து சாப்பிடலாம்
கதை #S61 நீங்கள் உபயோகித்த முறை தான்
கதை #S62 புகழ்ச்சி செய்பவர்களிடம்
கதை #S63 புத்திசாலி மீன்
கதை #S64 நானும் புலிதான்டா
கதை #S65 நான் புலி.ய்.ய்...டா...!
கதை #S66 இனிப்பான ஆப்பிள்
கதை #S67 ஐ லவ் யூ அப்பா
கதை #S68 அடித்த வலி
கதை #S69 சில நிமிட மெளனங்கள்
கதை #S70 எனக்கு தான் அப்பா இருக்காரே!
கதை #S71 தீய்ந்த தோசை
கதை #S72 மகனே இன்று முதல் நீ
கதை #S73 நல்ல பெயர்
கதை #S74 முட்டாள் மாடு
கதை #S75 அரசனின் தவறு
கதை #S76 போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய்
கதை #S77 ஆபிசில் நிறைய வேலை
கதை #S78 மேனேஜரின் இரக்கம்
கதை #S79 பெரியவரின் இரக்கம்
கதை #S80 தலைவலிக்கு நல்ல மருந்து
கதை #S81 ஆயுள் முழுவதும் வேலையாட்கள்
கதை #S82 மவனே யார் கிட்ட
கதை #S83 அரசியல்வாதியா, கொக்கா?
கதை #S84 இது தான் பேங்க் சட்டம்
கதை #S85 சிலந்தியின் வலை வலுவானது
கதை #S86 மகனின் அருகாமை
கதை #S87 உண்மையான மாலை
கதை #S88 மலர்க்கொத்து
கதை #S89 கயிற்றுப்பாலம்
கதை #S90 இது என் குழந்தை
கதை #S91 கண்டுபிடித்தற்கு
கதை #S92 தேவதையின் நிபந்தனை
கதை #S93 வாயைத்திறந்தால் இறந்து விடுவாய்!
கதை #S94 பறக்காத கிளி
கதை #S95 அப்போதும் பணம் கிடைத்திருக்கும்
கதை #S96 குடிக்க வேண்டிய கட்டாயம்
கதை #S97 நான் திராட்சை சாப்பிடலாமா?
கதை #S98 எப்படி அடைந்து கிடந்தீர்கள்?
கதை #S99 99 நோட்டுகள்
கதை #S100 எதில் கவனம் செலுத்த வேண்டும்
________________________
https://www.facebook.com/tamilkuttystorys

Previous Next
முந்தைய #SL01 அடுத்த #SL03