Tamil Stories தமிழ் கதைகள்
5.61K subscribers
1 video
8 links
தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story
Download Telegram
இதைப் பற்றி எண்ணியபடியே நடந்து சென்றதால் தடுமாறினார்.

கீழே விழ இருந்தவரை, பேத்தி தன் தோள்களால் தாங்கிப் பிடித்து சோபாவில் உட்கார வைத்தாள். பிறகு, அவள் தன் பையைத் திறந்து ஒரு ஓவியப் புத்தகத்தை எடுத்து வந்து, “தாத்தா. நான் இன்று ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன்.” என்று சொன்னாள். ஓ அப்படியா. போட்டிக்காக நீ வரைந்ததைக் காட்டு. பார்க்கலாம். என்றார்.


சுவற்றில் இருந்த அப்பாவின் கை பதிவை, ஓவியமாகத் தீட்டியதைக் காட்டினாள். மேலும். “எங்கள் ஆசிரியர் இந்த ஓவியத்தைப் பற்றி விளக்கம் அளிக்கும்படி சொன்னார்.” அதற்கு நான், “இது ஒரு தனித்துவமான வடிவமைப்பால் சுவற்றில் பதிக்கப்பட்ட என் பெரிய தாத்தாவின் கைரேகை” என்று ஆசிரியரிடம் சொன்னேன்.

ஆசிரியர் என்னைப் பாராட்டியதோடு, சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் வண்ணக் குறிகள், கை அடையாளங்கள், கீறல்கள், கால் தடயங்கள் மற்றும் வரைபடங்கள் போன்றவற்றை குழந்தைகள் கிறுக்குவார்கள். இதைக் கண்ட பெற்றோர்கள் பாராட்டுகிறார்கள். குழந்தைகள் செய்ததைப் பற்றி பேசி பெருமைப்படுகிறார்கள். அதேபோல, வயதானவர்களை நேசிப்பது மற்றும் ஆதரவளிப்பது பற்றியும் ஆசிரியர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.” என்று சொன்னாள் பேத்தி.

மகன் மற்றும் பேத்திக்கு முன்னால் மிகவும் சிறியவனாக உணர்ந்தார். அறைக்குள் வந்து கதவை மெதுவாக மூடிக்கொண்டு, இதயம் லேசாகும் வரை அழுதார் அந்த வயதானவர்.
கதை #S628
மகனின் முடிவு

மனைவி இறக்கும்போது, அவருக்கு வயது 45 இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை. அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது எனக்கு போதும். அவனுக்காக வாழ போகிறேன். இன்னொரு துணை எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.

வருடங்கள் உருண்டோடியது. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும் மகனிடம் எழுதி கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டார்.

ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம் சீக்கிரமாக காலை உணவு உண்ண, மருமகளிடம் ரொட்டியில் தடவ வெண்ணெய் தருமாறு கேட்டார். மருமகளோ, வெண்ணை தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள். மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார, தகப்பன் வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார். மகன் உணவருந்தும் போது, மேஜையில் வெண்ணை கொண்டு வந்து வைத்தாள் மனைவி. ஒன்றும் பேசாமல், மகன் தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான். அந்த வெண்ணையை பற்றிய சிந்தனையே அந்நாள் முழுதும் அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

மறுநாள் காலையில் தன் தகப்பனை அழைத்தான். அப்பா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான். ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க. நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம். என் பெயரில் எழுதிய அனைத்தையும். உங்கள் பெயருக்கே மாற்றி கொள்ளுங்கள். இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன். மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன், என்றான்.

ஏன் இந்த திடீர் முடிவு? இல்லை அப்பா உங்கள் மதிப்பு என்னவென்று என் மனைவிக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சாதாரண வெண்ணைக்காக நீங்கள் கையேந்தும் நிலை வரக்கூடாது. ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை அவள் உணர வேண்டும். மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்.
கதை #S629
பொறுமை

நான் பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு உணவருந்த சென்றேன். மெனுவை படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள். தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள்.

எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் விரைவான மற்றும் சிறந்த சேவை. பிச்சைக்காரன் போல் காத்திருக்க வேண்டியதில்லை என்றார்.

என்னால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை கேன்சல் செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டர் ஐ கூப்பிட்டேன். வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார். சார் உங்களுடைய நீங்கள் மிகவும் முக்கியமானவர் எங்களுக்கு. அதை எங்கள் தலைமை சமையல்காரர் அவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.

அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார்.

நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை ஆறு பேர் எனக்கு பறிமானார்கள். விதவிதமான அலங்காரம் செய்யப்பட்ட உயர்தர உணவு வகைகள் ராஜ உபசரணையுடன் பரிமாறுப்பட்டது. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார். அவர் என் பள்ளி நண்பர் அவர் என்னை ஆச்சரியப்படுத்த விரும்பினார். அவர் எனது எளிய உணவை பணக்கார உணவாக மாற்றி, எனக்கு ராயல் ட்ரீட் கொடுக்குமாறு சமையல் அறையில் உள்ள பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய வாடிக்கையாளர் சேவை கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்.

அது தான் வாழ்க்கை. சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.

உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று. அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்.

எதற்குமே கவலை கொள்ளாதீர்கள். பிரபஞ்சம் அனைத்திற்கும் உரிமையாளரான கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை Chief chef கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும். பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள். நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.
கதை #630
கடவுளுடன் சாப்பிட்டேன்

ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான். அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்துக் கொண்டான். காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன், சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான். அங்கு வயதான பெண்மணி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருந்தார். நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான் சிறுவன்.

அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள். ஒருவேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்று நினைத்து தண்ணீர் பாட்டிலை நீட்டினான். பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.

அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை, அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.

அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள். இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர். நேரம் ஆக ஆக அம்மா ஞாபகம் வந்தது சிறுவனுக்கு, அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான். பாட்டி அவன் செயலைப்பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.

சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள். “நான் மதியம் கடவுளுடன் சாப்பிட்டேன்” என்றான். கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.

அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான். "இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்” என்றாள், அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை, ஆறுதலான வார்த்தை, சின்ன உதவி, செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான். கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்.
கதை #S631
அவரவர் தான் பொறுப்பு

அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார். எரிச்சலும் கொள்வார். ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்.

ஒருநாள் அவரது கணவர், "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" என்று அந்த பெண்ணிடம் கூறினார். அவரும் அமைதியாக சம்மதித்தார்.

மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான். அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும். முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக.

மகள் ஓடி வந்து, "அம்மா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு. அதற்கு தாய், "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்.

குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்.

ஒருநாள் அந்த பெண்மணியே எல்லோரையும் அழைத்து அமர வைத்து பின்வருமாறு கூறினார்: "சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது. அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு. என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம், என்னுடைய பயம், என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை. அவை என் ஆரோக்கியத்தை கெடுத்து என் பிரச்சினைகளை தான் அதிகரிக்கும்.

என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும். உங்களுக்கு தேவைப்பட்டால் என் அறிவுரைகளை நான் தருவேன். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.

ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை. உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு கூறல் வேண்டும். உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் சந்தோசத்தை நீங்களே தேடுமளவுக்கு நீங்களும் எல்லா அறிவையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே தான் நான் அமைதியாகி விட்டேன்."

குடும்பமே வாயடைத்துப் போனது. அவர்களின் செயல்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று அனைவரும் உணர்ந்து விட்டால் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக மாறும்.
கதை #S632
உறவுகளை நிலைக்க

ஒரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள். விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்துவிட்டு, அழகான சீனக்கோப்பை இது. எவ்வாறு உடைந்தது? என ஆதங்கமாகக் கேட்டார்.

எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது, என அப்பா வருத்தமான குரலில் சொல்லவே, நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார். இதைக்கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான். உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்?

உண்மைதான். தேநீர் கோப்பையைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள். அவள் கவனமாக மேஜைமீது அதை வைக்கவில்லை. ஆகவே தவறி விழுந்து விட்டது. இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக்கொள்வாரா? நிச்சயம் என் மீது சந்தேகப்படவே செய்வார். அதற்குப்பதிலாக செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டுவிடுவதே சரி என நினைத்தேன். ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கி சொல்லியிருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார். அதன்பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும். மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும். உறவுகளை உடைபடாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப்படவே செய்கின்றன. அப்பாவின் முப்பதுஆண்டுகால அனுபவம்தான் அவரை இந்த முடிவு எடுக்க செய்திருக்கிறது.

வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே. இதற்கு மாறாக சிலர் தங்களது சுயநலத்திற்காக குடும்ப உறவுகளை சிதைத்து கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள். உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிது. காப்பாற்றிக்கொள்வது எளிதல்ல. விட்டுக் கொடுத்தலும், புரிதலும், அரவணைத்துப் போதலும் அத்தியாவசமானது. நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன
கதை #S633
பக்குவ நிலை

சண்டைக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ள பண்ணையார் ஒருவருக்கு புதிதாக ஒரு சேவல் குஞ்சு கிடைத்தது. அதனை வீர, தீர பராக்கிரமம் மிக்க சேவலாக வளர்க்க வேண்டும் என்று ஆசை. ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறும் சேவல் சண்டை பங்கேற்க செய்து வெற்றி பெற செய்ய வேண்டும் என விரும்பினார்.

சுற்றிலும் விசாரித்தசமயம் ஊருக்கு வெளியே வஸ்தாது ஒருவர் சேவல்களைப் பயிற்றுவிக்கும் செய்தி கிடைத்தது. அவரிடம் சென்று சேவலை சண்டையிட பயிற்சி செய்து தருமாறு கேட்டார். வஸ்தாதும், சரி! என்று ஏற்றுக் கொண்டார்.

பண்ணையார் சுமார் ஒரு மாதம் கழித்து செல்லும் சமயம், அந்த சேவல் அங்கும், இங்குமாக சென்று மற்ற சேவல்கள் இடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் பண்ணையாருக்கு ஆச்சரியம். இந்த சேவலைக் கண்டு மற்ற சேவல்கள்பயந்து ஓடுகின்றன என்று சேவலை பெற்றுக் கொள்ளலாமா? என்று கேட்டார். இல்லை. உங்கள் சேவல் இன்னும் தயாராகவில்லை! சிறிது நாட்கள் கழித்தவாருங்கள்! என்று அனுப்பி விட்டார்.

பண்ணையார் அடுத்த மாதம் செல்லும் சமயம், சேவல் மற்ற சேவல்களை மட்டுமல்ல! அங்கிருந்த ஆடு, நாய் போன்றவற்றைக் கூட விரட்டிக் கொண்டிருந்தது. மிகுந்த ஆச்சரியப்பட்ட பண்ணையார் இப்போது தயாராகி விட்டது. எடுத்துக் கொள்ளலாமா? என்கிறார். ஆனால் வஸ்தாது, இல்லை. இல்லை. இன்னும் சில காலம் கழித்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.

அடுத்த மாதம் செல்லும் சமயம், அந்த சேவல் கூரையில் ஏறி கொக்கரக்கோ! என்று கூறும் சமயமே அங்கிருந்த ஆடு, நாய் சேவல் போன்ற அனைத்துமே விதிர்விதிர்த்து பயந்து ஓட ஆரம்பித்தன. ஒரு சேவலின் சத்தத்திற்கு இவ்வளவு சக்தியா? இப்போது என்னுடைய சேவலை பெற்றுக் கொள்ளலாமா? என்று கேட்டார். இல்லை. இன்னும் தயாராகவில்லை! அடுத்த மாதம் வாருங்கள்! என்றார். வெறுத்துப் போனார் பண்ணையார்.

ஆனாலும் வஸ்தாது போல பண்ணையார் அடுத்த மாதம் செல்லும் சமயம் சேவல் சாந்தமாக, சமர்த்தாக, மகா அமைதியாக அமந்து இருந்தது. அதன் அருகில் மற்ற உயிரினங்கள் மட்டுமல்ல. சிறு, சிறு கோழி குஞ்சுகள் கூட பயம் இல்லாமல் சென்று வந்து கொண்டிருந்தது. பண்ணையாருக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும். என்ன சேவல் இவ்வளவு அமைதியாகிவிட்டது? என்று.

ஆனால் பயில்வான், உங்களுடைய சேவல் தயாராகிவிட்டது. எந்த ஆர்ப்பாட்டமும் கிடையாது. அது ரொம்ப அமைதி அடைந்து விட்டது இப்போது நீங்கள் சேவல் சண்டைக்கான தேதியை அறிவிக்கலாம் என்கிறார். எடுத்துச் செல்லுங்கள்! என்றதும் பண்ணையாருக்கு கோபம். என்னுடைய சேவல் வாட்டசாட்டமாக, ஆர்ப்பாட்டமாக இருக்கும் சமயம் தராமல் இப்போது அமைதியாக இருக்கும் சமயம் எடுத்து போ! என்று கூறுகிறீர்களே? என்று சண்டைக்கு வந்தார்.

அதற்கு வஸ்தாது, இப்போதுதான் அந்த சேவல் தன்னுடைய உண்மையான பலம், மற்றும் சக்தியை உணர்ந்து கொண்டது. தன்னுடைய பலமும், சக்தியும் உணர்ந்தவன் ஒருபோதும் அடுத்தவரிடம் வம்புக்கு இழுக்க மாட்டான். தன்னுடைய சக்தியையும் விரயம் செய்ய மாட்டான்! என்றவாறு அனுப்பி வைத்தார்.

பக்குவம் என்பது அதுதான். இது சேவலுக்கு மட்டுமல்ல! மனிதருக்கும் பொருந்தும்.
கதை #S634
அரைகுறையின் உச்சம்

ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.

ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார். அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன. அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார்.

அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே “மிகச்சிறந்த” வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான். மாமிச மலை தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார்.

இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான். அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார். அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார்.

அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர்.
புரியவில்லை” என்றார் அரசர்.

இப்போது அந்த இளவரசனுக்கு தன் மீது நம்பிக்கை வந்துவிட்டது. இப்போது அந்த இளவரசன் எவரோடும் சண்டைக்கு போக வேண்டிய அவசியமே இல்லை அரசே. யார் வேண்டுமென்றாலும் வரட்டும். இளவரசன் ஒரு பார்வை பார்த்தால் போதும். வருகின்றவர்கள் எல்லாம் எரிந்து சாம்பலாகி விடுவார்கள். அவ்வளவு சக்தி வந்துவிட்டது.

எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்போது ஒரு மனிதன் தன்னிறைவு பெறுகின்றானோ தான் செய்கின்ற தர்மம் மீது நம்பிக்கை வைக்கின்றானோ, தன்னுடைய மனம் மீது ஊக்கத்தை வைக்கின்றானோ, தனக்கு ஒரு மிகப்பெரிய உதவி இருக்கிறது என்று அசைக்க முடியாமல் அவன் தன்னையும் அதற்கு மேலே இந்த பரம்பொருளாகிய இறைவனையும் நம்புகின்றானோ. அவன் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பயப்படவே மாட்டான்.

எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான். அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்.
கதை #635
செய்யாத தவறுக்கு தண்டனை

ஒரு மன்னர் இளவரசனுக்கு கல்வி கற்பதற்கு ஒரு ஆசானை நியமித்தார். இளவரசன் பண்புள்ளவர் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார் இருந்தாலும் ஒரு நாள் அந்த ஆசான் எந்த தவறும் செய்யாத இளவரசனை கடுமையாகத் திட்டி அவமானப்படுத்திவிட்டார். முதுகில் ஓர் கடுமையான அடியும் விழுந்தது.

அன்றிலிருந்து இளவரசனுக்கு ஆசானின் மீது வெறுப்பு ஏற்பட்டது. அந்த அவமானம் அவர் நெஞ்சில் உறைந்து விட்டது. இளவரசர் வளர்ந்தார். தந்தைக்குப் பிறகு சிம்மாசனம் ஏறினார். புது மன்னனாக முடிசூட்டிக் கொண்ட உடனேயே காரணம் இல்லாமல் தன்னை அடித்த ஆசானை வர செய்தார். “அன்று எந்த தவறும் செய்யாமல் ஏன் என்னை அநியாயமாக அடித்தீர்கள்” என்று கேட்டார்.

“மன்னர் அவர்களே நீங்கள் ஒரு நாள் சிம்மாசனத்தில் அமர போகிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். அப்போது நீங்கள் நீதி பரிபாலனமும் செய்வீர்கள் பல வழக்குகள் உங்கள் முன் வரும். ஒன்றும் தவறு செய்யாத அப்பாவிகளும் உங்கள் முன் குற்றம் சுமத்தி நிறுத்தப்படுவார்கள். தவறு செய்யாமல் ஒருவர் தண்டிக்கப்பட்டால் அது எவ்வளவு வலியைத் தரும் என்பதை உணர்ந்தால்தான் நீங்கள் அதுபோல தவறான நீதியை வழங்க மாட்டீர்கள். எனவே அநீதியின் சுவையை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு செயலை நான் செய்தேன். ஒரு நாளும் நீங்கள் மறக்கமாட்டீர்கள் உங்களை எல்லோரும் மன்னர் நீதி தவறாதவர் என்று பாராட்ட வேண்டும் என்று அன்று அச்செயலை செய்தேன்” என்று குறிப்பிட்டார். மன்னர் வியப்பில் உறைந்து போனார்.

எந்த தவறும் செய்யாத போதும் சில நேரங்களில் உங்களுக்கு இறைவன் கஷ்டங்களை கொடுக்கிறான் என்றால் உங்களை மேன்மை அடையச் செய்ய வேண்டும்.
கதை #S636
தன் திறமைக்காக

மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்.

இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான். மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம்.

காரணம் கேட்கிறார். குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்.

கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்"

பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம். அந்த பலத்தை உன்னை நேசிப்பவர்களிடமோ, அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ காட்டாதீர்கள்.

இன்று நீ பலவானாக இருக்கலாம் நாளை என்னவாகும் என்பதை படைத்தவன் மட்டுமே அறிவான்.
கதை #S637
செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு

அரசனுக்கு ஒரு ஆசை தோன்றியது சாதாரண உடை அணிந்து தெருவில் நடந்து சென்றால் எத்தனை பேர் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினான். உடனே சாதாரண உடை அணிந்து கொண்டு, தனது மெய்க் காப்பாளனை உடன் அழைத்துக் கொண்டு வீதியில் இறங்கி நடந்து சென்றார்.

மெய்க்காப்பாளன் முன்னே செல்ல சிறிது இடைவெளியில் அரசன் பின்னே நடந்து சென்றார் வீதியில் எதிர்ப்பட்ட அனைவரும் மெய்க்காப்பாளனைக் கண்டு புன் முறுவல் பூத்தவாறு சென்றனர் அரசனை யாரும் கண்டு கொள்ளவேயில்லை மன்னனுக்கு மெய்க் காப்பாளனுக்கு இருந்த மரியாதை கண்டு ஒரு புறம் ஆச்சரியம் மறுபுறம் தன்னை யாரும் அடையாளம் காணவில்லையே என்று கடுமையான கோபம் அவனிடம் சற்று கடுமையாகவே கேட்டார் “என்ன உனக்கு நாட்டில் எல்லோரையும் தெரியும் போலிருக்கிறதே அவ்வளவு செல்வாக்கா உனக்கு?”

அவன் சொன்னான் “எனக்கு இவர்கள் யாரையும் முன்னேபின்னே தெரியாது!“ அரசன் ஒன்றும் புரியாமல் திகைப்பதைப் பார்த்து மேலும் அவன் சொன்னான் “அரசே” நான் சாலையில் நடக்கும்போது எதிரில் வரும் யாரைப் பார்த்தாலும் ஒரு சினேக பாவத்துடன் சிறிதாகப் புன்முறுவல் பூப்பேன் அப்போது எதிரில் வருபவன் எப்படிப்பட்ட குணம் உடையவனாகினும் பதிலுக்கு கட்டாயம் புன்முறுவல் பூப்பான் இப்போதும் அப்படித்தான் நடந்தது.” என்று மெய்க் காப்பாளன் விளக்கினான்.

உனக்கு என்ன வேண்டுமோ அதை முதலில் மற்றவர்களுக்கு வழங்கு.
@Tamilstory

Story List #SL14
கதை பட்டியல் 651 - 700
______
கதை
#S651 தர்மம் தலை காக்கும்
கதை #S652 நம்பிக்கையே துணை
கதை #S653 பயணம் மிகவும் குறுகியது
கதை #S654 கடவுளின் கணக்கு
கதை #S655 பாவமன்னிப்பு சீட்டு
கதை #S656 எப்பொழுதுமே குடிகாரன்
கதை #S657 பழி சொல்
கதை #S658 நான் யாருன்னு
கதை #S659 அடுத்தவர் போல வேஷம்
கதை #S660 அகங்காரம்
கதை #S661 50 ரூபாய்
கதை #S662 திமிர் பிடிச்ச சேவல்
கதை #S663 பலவானின் அராஜகம்
கதை #S664 செய் நன்றி மறந்தவருக்கு
கதை #S665 திருப்தி
கதை #S666 பேராசை
கதை #S667 பொன்முட்டை
கதை #S668 13ம் நம்பர் அறை
கதை #S669 உணவளித்தது யார்
கதை #S670 ஜோடி கிளி
கதை #S671 ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
கதை #S672 சுமையான சேகரிப்பு
கதை #S673 வாழ்க்கைகான மந்திரம் உழைப்பே
கதை #S674
கதை #S675
கதை #S676
கதை #S677
கதை #S678
கதை #S679
கதை #S680
கதை #S681
கதை #S682
கதை #S683
கதை #S684
கதை #S685
கதை #S686
கதை #S687
கதை #S688
கதை #S689
கதை #S690
கதை #S691
கதை #S692
கதை #S693
கதை #S694
கதை #S695
கதை #S696
கதை #S697
கதை #S698
கதை #S699
கதை #S700

https://www.facebook.com/tamilkuttystorys
______
Previous
Next
முந்தைய #SL13 அடுத்த #SL15
கதை #638
அழுக்கான நீர்

ஒரு தோட்டக்கார தந்தை தனது 11 வயது மகன் அழுவதைக் கண்டார்.

"என்ன விஷயம் மகனே? ஏன் அழுகிறாய்?"என்று அவனிடம் கேட்டார்.

சிறுவன் பதிலளித்தான். "எனது பணக்கார வகுப்பு தோழர்கள் என்னை, "நீ தோட்டக்காரனின் மகன்" என்று கேலி செய்கின்றனர். "உனது தந்தை ஒரு சாதாரண தினசரி கூலிக்காரன்" என்றெல்லாம் என்னை கேலி செய்கின்றனர்" என்று அழுதபடியே கூறினான்.

தந்தை சிறிது நேரம் நிதானமாக யோசித்து, பிறகு கூறினார். "என்னுடன் வா மகனே, சில பூச்செடி விதைகளை நடுவோம். அது உன்னை உற்சாகப்படுத்தும்" "ஒரு பரிசோதனையை மேற்கொள்வோம். நாம் இருவரும் இரண்டு விதைகளை தனித்தனியாக நடுவோம். ஒன்றை நான் கவனிப்பேன், மற்றொன்றை நீ கவனித்துக்கொள்ள வேண்டும். நான் ஏரியிலிருந்து சுத்தமான தண்ணீரைக் கொண்டு வந்து நான் விதைத்த விதைக்கு தண்ணீர் ஊற்றுவேன். ஆனால் நீ பக்கத்தில் உள்ள குளத்தில் இருக்கும் அழுக்குத் தண்ணீரால் நீ விதைத்த விதைக்கு நீர் ஊற்ற வேண்டும். அடுத்து வரும் வாரங்களில் என்ன நடக்கிறது பார்ப்போம்"

ஒருநாள் காலை தந்தை தனது மகனை தோட்டத்திற்கு அழைத்து வந்து அவனிடம் காட்டி கூறினார்."இரண்டு பூ செடிகளை பார்த்து நீ என்ன நினைக்கிறாய் என்று சொல்".

சிறுவன் பதிலளித்தான்."உங்களுடைய செடியில் இருக்கும் பூவை விட என்னுடைய செடியில் இருக்கும் பூ நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஆனால் நீங்கள் ஊற்றிய தண்ணீர் சுத்தமாக இருந்ததே, நான் அசுத்தமான தண்ணீர் ஊற்றினேனே, இது எப்படி சாத்தியம்?"

தந்தை சிரித்துக்கொண்டே சொன்னார். "ஏனென்றால், அழுக்கான நீர்என்றாலும் கூட ஒரு செடியை வளர்ப்பதைத் தடுக்க முடியாது, மாறாக அது செழித்து வளர உதவும் உரமாக மாறுகிறது. மகனே, வாழ்க்கையில் உன்னைத் தாழ்த்தி, உன் கனவுகளை கேலி செய்து, உன் மீது அழுக்கை வீசும் சிலர் இருப்பார்கள். உன் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள், அவர்களின் ஈகோவை அவர்கள் திருப்திப்படுத்த வேண்டும், அதற்காக அப்படி நடந்து கொள்கிறார்கள். எனவே, மக்களிடமிருந்து வரும் கடுமையான வார்த்தைகள் உன் இலட்சியத்தை பாதிக்க விடாதே, மாறாக, அது உன்னை ஒரு சிறந்த மனிதனாக வளர ஊக்குவிக்கட்டும். செடியைப் போல இரு, எதிர்மறை மற்றும் கடுமையான வார்த்தைகள் போன்ற அழுக்குகளுக்கு மத்தியில் கூட செழித்து வளரவேண்டும் என்ற உறுதி கொள்."
கதை #639
அடி விழும்போதெல்லாம்

ஒருவருக்கு சோதனைகளில் இருந்து மீண்டு வாழ்வில் வெற்றிப் பெற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஒரு அறிஞரை சந்தித்து தீர்வு கேட்டார்.

அதற்கு அவர் குதிரைப் பந்தயத்திற்கு செல்லுங்கள். ஆனால் பணம் கட்டாதீர்கள். பந்தயம் மட்டும் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

பந்தயத்தை பார்த்து திரும்பியவரிடம் அறிஞர் விளக்கம் சொன்னார்.

“பந்தயக் குதிரைக்கு நான் ஏன் ஓடுகின்றோம் என்று தெரியாது. ஆனால் முதுகில் அடி விழும்போதெல்லாம் இன்னும் வேகமாக ஓடுகிறது. இலக்கை சென்று சேர்கிறது.

குதிரைக்கே இந்த புரிந்தால் இருந்தால், குறிக்கோள் கொண்ட மனிதனுக்கு இருக்க வேண்டாமா? என்றார்.

“சோதனைகளில்தான் சாதனை” என்பதை இப்படி விளக்கினார் அந்த அறிஞர்.
சாதனை புரிவதற்கு முன் வரும் சோதனைகளை பயிற்சியாக ஏற்றுக் கொண்டால்தான் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியும். நீண்ட தூரம் ஓடி வந்தால்தான் உயரம் தாண்ட முடியும் என்பதை நாம் அறிந்து இருக்கிறோம். அதுபோல தான் சோதனைகள் அதிகமானால், மிகப்பெரிய வெற்றி காத்திருப்பதாகவே அர்த்தம்.
கதை #640
தொலைந்து போன தோல்வி

ஒருமுறை கூட முதல் முயற்சியிலேயே வெற்றியைச் சுவைத்ததில்லை அவன். ஒருசில நாட்கள் அவனைக் கவனித்து வந்த குரு, ஒருநாள் அவனை அழைத்துப் பேசினார். “கிளி ஜோதிடர்களின் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கிளிகள் சீட்டை எடுக்க வெளியே வந்தாலும், அவை தன் சிறகை விரித்துப் பறக்க முயற்சிப்பதில்லை. மனிதர்களைப் போல நடந்து தான் வெளியே வருகின்றன. திரும்பவும் நடந்தே கூண்டுக்குள் செல்கின்றன. இது எதனால் என்று தெரியுமா?“ என்று கேட்டார் குரு.

ஓரிரு நொடிகள் யோசித்து விட்டு, “தெரியவில்லை குருவே” என்றான் சிஷ்யன்.

குரு பேசலானார். “சுதந்திரமாகப் பறந்து திரியும் கிளியைப் பிடித்தவுடன் முதலில் அதன் சிறகுகளை வெட்டியெடுத்து விடுவார்கள். சிறகிழந்த கிளியானது அதை உணராமல் பறக்க முயற்சிக்கும். ஆனால், அதனால் இயலாது. தனக்கு இறகுகள் இல்லை என்று கிளிக்குத் தெரியாது. மீண்டும் மீண்டும் பறக்க முயற்சிக்கும். ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும். “.

கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் சிஷ்யன். “வெட்டப்பட்ட சிறகுகள் மறுபடியும் நாளடைவில் வளர்ந்து விடும். கிளியால் அப்போது பறக்க முடியும். ஆனால் அது பறக்க முயற்சிப்பதில்லை! தான் ஒவ்வொரு முறையும் பறக்க முயன்று அது பலிக்காததால், தனக்கு இப்போது பறக்கும் சக்தி இல்லை என்று அது தவறாக நம்பிக் கொள்ளும். சிறகை விரித்துப் பறக்கும் பழக்கத்தையே மறந்து போய் விடும். “.
குருவின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க கிளிக்கும் தனக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பது அரைகுறையாகப் புரிந்தது சிஷ்யனுக்கு. முழுமையாகப் புரியச் செய்தார் குரு.

“எத்தனை முறை முயற்சி செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எத்தனை முறை தோல்வியடைகிறோம் என்பதும் முக்கியமல்ல. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் அடுத்த முறை வெற்றி கிடைக்கும் என நம்புவதும், அதே நம்பிக்கையுடன் விடாமுயற்சியைத் தொடர்வதும் தான் முக்கியமாகும். இத்தனை தடவைகள் தோற்றுப் போனோமே என்ற கவலையை மனதுக்குள் கொண்டு சென்றால், அதனால் பதட்டமே ஏற்படும். அடுத்த முயற்சியும் தோல்வியாக முடியவே வாய்ப்புகள் அதிகமாகும். வெற்றியைச் சந்திக்க வாய்ப்பு இருந்தும், நம்பிக்கை இன்மையால் முழு அளவில் முயற்சி செய்யாமல் தோற்றுப் போவோம்“என்றார் குரு. அதன் பின்னர் தோல்விகளைப் பொருட்படுத்தும் பழக்கம் தொலைந்து போனது சிஷ்யனிடம். என்ன ஆச்சர்யம். முதல் முயற்சிகளிலேயே வெற்றிகள்அவனைத் தேடி வந்தன.
கதை #641
சோதனைகளை தாங்கு

ஒரு துறவி காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருமனிதன், அங்கிருந்த மரம் ஒன்றில் கயிறு ஒன்றை மாட்டி, சுருக்கு போட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு சில வினாடி களில், அவன் கழுத்தை அதனுள்ளே நுழைத்து துாக்கில் தொங்க தயாரான போது, “நில்! ” என்று கம்பீரமாக உத்தரவிட்டார் துறவி! அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருங்கெடுத்து ஓடியது. “என்ன காரணத்தால் இந்த மாதிரித் தவறான முயற்சியில் ஈடுபடுகிறாய்? ” என்று கேட்டார் துறவி.

“சுவாமி, என் வாழ்க்கை முழுவதும் கண்ணீர். பிறந்ததிலிருந்து துன்பம், துயரம், வறுமை. எனக்கு இவ்வுலகில் வாழ தெரியவில்லை. நான் நேர்மையானவன்; உண்மையானவன். எனக்கு பணம் சம்பாதிக்க தெரியவில்லை. எனவே, அவ்வப்போது பட்டினி. வேலை செய்யும் இடங்களில் என் உழைப்புச் சுரண்டப்படுகிறது. என் கூலி குறைக்கப்படுகிறது.

“எனக்குரிய கூலியை காலம் தாழ்த்தி தருகின்றனர் அல்லது அலைய விட்டுத் தருகின்றனர். கூலி வாங்க நான் அலையும் போது செலவுக்கு வேண்டிய தொகை, என் குடும்பத்தின் மூன்று நாட்கள் சாப்பாட்டுச் செலவு. இப்படி எத்தனை எத்தனையோ சொல்லலாம்.

“நான் ஏழையாகவே உள்ளேன். ஏழையாக இருப்பதைக் குற்றமாக எண்ணவில்லை. வாழ்நாள் முழுவதும் இந்த துன்பங்களையும், துயரங்களையும் என் கடின உழைப்பால் போக்க முடியவில்லை. எனவே தான் சாக முயற்சித்தேன்; நீங்கள் தடுத்து விட்டீர்கள்,” என்று கதறினான்.

“மகனே நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொல். உலோகங்களிலேயே துாய்மையான ஒரு பொருள் என்று பாமர மக்களால் மதிக்கப்படுகிறது. ஆனால், அது விலை அதிகம். அதை ஆபரணமாக்க மனிதர்கள் முயலும் போது என்ன செய்கின்றனர்.

“நெருப்பில் போட்டு உருக்கி, சுத்தியால் தட்டி, நீட்டி, வளைத்து, பின் சிறு உளியனால் செதுக்குகின்றனர். மீண்டும் நெருப்பில் இட்டுக் காய்ச்சுகின்றனர்!

“சாதாரண உலோகமான தங்கம், மற்ற உலோகங்களை எல்லாம் விட விலை உயர்ந்தது. துாய்மையானது என தெரிந்திருந்தாலும் அதை எவ்வாறெல்லாம் பாடுபடுத்துகின்றனர். பயிர்களில் இனிமையானது கரும்பு என்பது உண்மைதான்! அதைத்தான் நசுக்கி, கசக்கி, பிழிந்து, சாறு எடுத்து, பின், வடிகட்டுகின்றனர். ஆகவே, நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடிய படிப்பினை என்ன. “நல்லவற்றுக்கு இப்படிப்பட்ட துக்கமான, கவலை தரக்கூடிய அனுபவங்கள் எல்லாம் உண்டாவது சகஜமான விஷயமே.”

“இதனால் விளைவது நன்மையே தவிர. வேறு எதுவுமில்லை. சாதாரணமாகப் பசுவின் பாலில் இருந்து பெறப்படுவது என்ன. “தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவை. இது எப்படி கிடைக்கிறது. பசுவிலிருந்து பாலைக் கறந்தவுடன், அது ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்டு அடுப்பின் மேல் ஏற்றப்பட்டு எவ்வளவு சூடாக்க முடியுமோ அவ்வளவு சூடாகும் வரை காய்ச்சப்படுகிறது. “

“அதன்பின், அதில் ஒரு துளி எலுமிச்சைச் சாறு விடப்பட்டு புரையிடப்படுகிறது. அது திரிந்து தயிராக மாறுகிறது. அந்தத் தயிரையும் ஒரு மத்துப் போட்டுக் கடை கடை என்று கடைந்து அதிலிருந்து வெண்ணெய் எடுக்கப்படுகிறது. மேலே திரண்டு வரும் வெண்ணெய் எடுக்கப்பட்டவுடன், சிறிதளவு நீர் ஊற்றி, அது மோர் ஆக்கப்படுகிறது. வெண்ணெய் அதன் பின் மீண்டும் அக்னிப் பரீட்சைக்கு உள்ளாகிறது. இப்போது அதிலிருந்து நெய் பெறப்படுகிறது. இவ்வளவு ஏன். அது பாலாக இருப்பதால்தான்! “

“ஆக, நல்லவர்கள், நாணயம் மிக்கவர்கள், நேர்மையானவர்கள், உண்மையை பேசுபவர்களுக்கெல்லாம் இவ்வாறு சோதனைகள் நேரிடுவது சகஜம். அறிவாளிகள் இதைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஆகவே, இந்த சோதனைகளை தாங்கு. முடிவில் நன்மையே கிடைக்கும்! வீட்டுக்குப் போ. உன் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே. அந்தப் பலன் வித்தியாசமான வடிவத்துடன், நீ எதிர்பாராத நாளில், எதிர்பாராத மனிதர் வடிவத்தில் வந்து உன்னைக் காக்கும்,” என்று அவனை ஆசிர்வதித்து அனுப்பினார்.
தெளிந்த மனதுடன் வீடு திரும்பினான் மனிதன்
கதை #642
பிரார்த்தனை

ஓர் ஊரில் நீண்ட காலமாக மழை இல்லை. ஆதலால் ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடி ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி ஊரிலுள்ள அனைவரும் ஒன்று கூடி, மழை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பிரார்த்தனைக்காக ஒரு நாளும், நேரமும் குறிக்கப்பட்டது. அந்த நாளும் வந்தது. அனைவரும் மைதானத்தில் கூடினர். அப்போது ஒரு சிறுமி, தன் தம்பியுடன் அந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்கு ஒரு குடையுடன் சென்றாள்.

சிறுமியைக் கண்ட சிலர், "நீ ஏன் குடையோடு வந்திருக்கிறாய்?” என்று கேட்டனர்.
அதற்கு அந்த சிறுமி, “நாம் இப்போது கூட்டுப் பிரார்த்தனை செய்யப் போகிறோம் இல்லையா? நம் பிரார்த்தனை முடிந்ததும் மழை வந்துவிடும்! அதனால்தான் முன்னெச்சரிக்கையாக நனையாமல் இருக்க நான் குடை எடுத்துக்கொண்டு தன் தம்பியுடன் வந்திருக்கிறேன்!” என்றாள்.

கேள்வி கேட்டவர்கள் அந்தச் சிறுமியைப் பார்த்துச் சிரித்தனர். அவர்கள் யாரும் குடை கொண்டு வரவில்லை. அன்றைய தினம் அங்கு கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தார்கள். அவர்களில் யாரிடமும் குடை என்பதே இல்லை. "இந்தச் சிறுமியைப் பார்த்தா பாவமா இருக்கு!. என்னிக்கும் இல்லாத மழை இன்னிக்குப் பெய்யப் போகுதாக்கும்!” என்று பலவாறு பேசியபடி பிரார்த்தனைக்குச் சென்றனர்.

அவர்களுக்கு, "நாம் இன்று இறைவனிடம் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்யப் போகிறோம். பிரார்த்தனையின் முடிவில் மழை நிச்சயம் வரும்” என்ற நம்பிக்கை துளிக்கூட இல்லை. எல்லோரும் நம்பிக்கை இல்லாமல்தான் பிரார்த்தனைக்கு வந்திருந்தனர்.

பிரார்த்தனை நடந்து முடிந்தது. வானிலிருந்து மழைத்துளிகள் படபட வென்று விழத்தொடங்கின! எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. சற்று நேரத்தில் பூமி நன்றாகக் குளிரும் அளவிற்கு மழை பலமாகப் பெய்தது! அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி! அப்போது அந்தச் சிறுமி தன் குடையை விரித்து கம்பீரமாக தன் தம்பியை மழையிலிருந்து பாதுகாத்தபடியே நடந்து சென்றாள்.

பக்கத்திலிருந்த வீடுகளில் ஒதுங்கிய ஒரு பெரியவர், அருகிலிருந்தவரிடம், "யாரோ ரொம்ப நம்பிக்கை உள்ளவங்க செய்த பிரார்த்தனையினாலேதான் இன்னிக்கு மழை பெய்திருக்கு! இறைவனின் கருணையே கருணை!” என்றார்.

"அதோ! குடையைப் பிடிச்சுக்கிட்டு, தன் தம்பியை அணைத்தவாறு போகிறாளே ஒரு சிறுமி!. அவளால்தான். அவளது உறுதியான் நம்பிக்கையினாலேதான் இன்னிக்கு மழை கொட்டுது!” என்றார் அருகிலிருந்தவர் மகிழ்ச்சியோடு!
கதை #643
வேலை செய்யாதவன்

ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது.

நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.

அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுது.

புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவுநாளா இது தோனலையேன்னு ஒரு முயலை செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவனையாவும் கொடுக்கனும்"னுது.

"ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரின்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னது, அப்படியே வாங்கிகிச்சு ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு.

இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி.

“எதைத்தான் தின்னா பித்தம் தெளியும்” என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்"

"யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான" அதிரடியாக சொன்னது ஆந்தை.

இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே படம் காட்டுபவன் சிலர் பிழைத்துக் கொள்கிறான். வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பலர் பாதிப்புக்கு உள்ளாகிறான்.
கதை #644
விலகி விடுதல்

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும். வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால். வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது? பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது".

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். ஆனால். நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள். அது உறவுகளாகவும் வேலை செய்யும் இடமாகவோ இருக்கலாம். உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் அல்லது விலகி விடுதல் நன்று.

"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது".
கதை #645
அன்புப் பரிசு

ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார்.

அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார்.

அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது.

இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார். அவரும் முதல் மருமகனைப் போலவே செய்ததால் அவருக்கும் ஒரு கார் பரிசாக வழங்கினார்.

முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை. திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டு கொள்ளவேயில்லை. மாமியார் கெஞ்சினார். ம்ஹும். பார்க்காதது போல் இருந்தார்." மாப்பிள்ளை காப்பாற்றுங்கள். விலை உயர்ந்த கார் வாங்கித் தருகிறேன்" என்று சொன்னார். "காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். புள்ள வளர்த்திருக்கிறா பார். புள்ள."ன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார். மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.

அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால். ஒரு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மிகவும் விலை உயர்ந்த புத்தம் புது மாடல் புதிய கார் வாசலில் நின்றது. அருகில் சென்று பார்த்தால். மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது.