Tamil Stories தமிழ் கதைகள்
5.64K subscribers
1 video
23 links
தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story
Download Telegram
கதை #S47
திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்கள்


அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். அந்தக் காட்டில், பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.

நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும், வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது. இருவரையும் நேரடியாக மோதவிட்டால், பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.

மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார். " இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி. இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்

தலைவனாக முடி சூட்டப்படுவான். இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும், சமையல் பாத்திரங்களும், நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும். தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள். அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம். உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.

மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள். பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும். அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும். இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும், மீன்களும் போதுமானதாக இருக்கும். ஆனால் சோள அடையோ, சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது. இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்
@Tamilstory
Story List #SL01
கதை பட்டியல் 01 - 50
______________________
கதை #S01 உனக்கு வேற வேலையே இல்லையா?
கதை #S02 நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா.?
கதை #S03 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே!
கதை #S04 ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?
கதை #S05 எனக்கு சுமை குறையப்போகிறதா?
கதை #S06 இவன பழக்குறதுக்குள்ளே
கதை #S07 இந்தக் காட்டுக்கு யார் ராஜா?
கதை #S08 உலகில் குறைகள் இருப்பதால்தான்
கதை #S09 நான் அந்த சகோதரனைப் போல்
கதை #S10 யார் காரணம்?
கதை #S11 தானே தீர்த்துக்கொண்டான்
கதை #S12 அன்போடு….
கதை #S13 ஒரு பல்லியால் முடியும்போது.
கதை #S14 சுவையான ரொட்டி
கதை #S15 ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்
கதை #S16 ஒவ்வொரு நொடியும் வாழ்
கதை #S17 தன்னிடம் இருப்பதையே கொடுப்பார்கள்
கதை #S18 நான் இங்கு வெறும் பிரதிநிதி
கதை #S19 முட்டாளுக்கு அறிவுரை வழங்காதே
கதை #S20 உன்னிடமே கேட்டுப் பார்த்துக்கிட்டியா
கதை #S21 எதிரியின் பலவீனம்
கதை #S22 எனக்கும்தான்
கதை #S23 கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி
கதை #S24 எறும்பும் வெட்டுக்கிளியும்
கதை #S25 ஜெய் உப்புமா!
கதை #S26 வாழ்க்கையின் ரகசியம்
கதை #S27 இதுதான் வாழ்க்கை
கதை #S28 இந்த தொகை மிகவும் அதிகம்
கதை #S29 இன்று ஆறு மீன்!
கதை #S30 அடமானமாய் என்ன தருவீங்க?
கதை #S31 சமன்பாடு
கதை #S32 கோவில் யானை
கதை #S33 தம்பிக்கு எந்த ஊரு?
கதை #S34 வாய்ப்புகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்
கதை #S35 உங்களது பேச்சில் பணிவும்
கதை #S36 நம்முடைய மதிப்பு
கதை #S37 தேநீர் விருந்து
கதை #S38 நேர்மையானவன்
கதை #S39 பணக்காரரின்பதில்!
கதை #S40 கோபத்தின் பலமும் அதன் வடிவமும்
கதை #S41 பற்றற்ற நிலை
கதை #S42 எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள்?
கதை #S43 பெரிய கற்கள்
கதை #S44 அப்பாவின் எச்சரிக்கை...!!
கதை #S45 ஓட்டப்பந்தயம்
கதை #S46 குடும்பத்தில் ஒருவர்
கதை #S47 திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்கள்
கதை #S48 எப்படி நடந்து கொள்கின்றீர்கள்
கதை #S49 ஓய்வு நேரத்தில்
கதை #S50 ஒவ்வொரு செயலிலும் மகிழ்ச்சி
______________________
https://www.facebook.com/tamilkuttystorys
Previous Next
முந்தைய #SL01 அடுத்த #SL02