இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
இவர்கள் தவிர்த்து 26 பேர் நிரந்தர அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மக்களவை தலைவர் மீராகுமார், திக்விஜய் சிங், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

10 பேர் கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. September 12, 2020 at 07:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | தொடரும் நீட் மரணங்கள்...

நாளை நீட் தேர்வு தேர்வு நடைபெற உள்ள சூழலில், மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை.

சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் மாணவர் ஒருவர் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடதக்கது. September 12, 2020 at 07:36AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஊரடங்கு தளர்வு; இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கம்.

தமிழகத்தில் இருந்து 3 ரயில்கள் இயக்க ஏற்பாடு

சென்னை சென்ட்ரல் - டெல்லி, சென்னை சென்ட்ரல் - சாப்ரா இடையே இருமார்க்கத்திலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்படும். https://t.co/e3KKcm3AnY September 12, 2020 at 07:45AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வரும் 15ஆம் தேதி முதல் திருச்சி-ஹவுரா  இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. September 12, 2020 at 07:45AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சிவகாசி | ஆர்டர்கள் குறைந்ததால் பாதிக்கப்பட்ட அச்சகத் தொழில்.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வெளி மாநிலப் போக்குவரத்து வசதி இல்லாததால் ‘ஆர்டர்கள்’ குறைந்துள்ளன.

இதனால் சிவகாசியில் 2021-ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. https://t.co/sIOxkMmPXD September 12, 2020 at 01:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.நடராஜன் மறைவு.

முதல்வர், தலைவர்கள் இரங்கல்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.நடராஜன் நேற்று காலமானார்.

அவருக்கு வயது 89. https://t.co/zUTmrQpZc9 September 12, 2020 at 01:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி

- மாவட்ட காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுவில் மாவட்டத் தலைவர் க.வீரபாண்டியன் தலைமையில் தீர்மானம். https://t.co/iEibLzQ0wU September 12, 2020 at 01:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பிரதமரின் ஆவாஸ் யோஜனா எனப்படும் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் மோசடி.

முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி, அதில் தொடர்புடையவர்கள் மீதான நடவடிக்கை குறித்து மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும்

- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ. https://t.co/Oxg5FGQKW7 September 12, 2020 at 02:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விமானத்துக்குள் யாரேனும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால் 2 வாரங்களுக்கு குறிப்பிட்ட வழித்தடத்தில் விமானம் இயக்கத் தடை விதிக்கப்படும்

- சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை. https://t.co/mLchEvgvaF September 12, 2020 at 05:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விமானத்துக்குள் யாரேனும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால் 2 வாரங்களுக்கு குறிப்பிட்ட வழித்தடத்தில் விமானம் இயக்கத் தடை விதிக்கப்படும்

- சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை. https://t.co/uh8w5ds0M6 September 12, 2020 at 05:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இரவு 10 மணி வரை பெட்ரோல் பங்குகள் செயல்பட அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. https://t.co/zZwznmbSIP September 12, 2020 at 05:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை! September 12, 2020 at 05:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எண்ணெய்க் கிணறு அமைக்க ஓஎன்ஜிசிக்கு 2023 வரை கால நீட்டிப்பு : மத்திய அரசின் முடிவுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி உட்பட 8இடங்களில் ஓஎன்ஜிசி சார்பில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க மேலும் கால அவகாசம்  வழங்கப்படுவதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு https://t.co/jDhn776keH September 12, 2020 at 05:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | நீட் தேர்வு பயத்தில் தருமபுரியில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை.

தருமபுரியைச் சேர்ந்த மாணவன் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை. September 12, 2020 at 08:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீன ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட அருணாச்சலப்பிரதேச இளைஞர்கள் 5 பேர் பத்திரமாக விடுவிப்பு

- இந்திய ராணுவம் நடவடிக்கை

வேட்டைக்கு சென்ற 5 இந்தியர்களை சீன ராணுவம் பிடித்துச்சென்ற நிலையில், இந்திய ராணுவத்தின் பேச்சுவாரத்தைக்குப்பின், இன்று 5 பேரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர் https://t.co/0u3Jr5ueXu September 12, 2020 at 08:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19Update | தமிழ்நாட்டில் இன்று 5,495 பேருக்கு கொரோனா உறுதி.

6227 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

76 பேர் உயிரிழப்பு.

சென்னையில் 978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி https://t.co/bYWwjBHWkX September 12, 2020 at 08:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாடு பயணம்.

சோனியா காந்தியுடன் ராகுல் காந்தியும் பயணம்.

இதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு. September 12, 2020 at 09:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | நீட் தேர்வு எழுத இருந்த நாமக்கல் மாவட்டம் இடையன்பரப்பை சேர்ந்த மாணவர் மோதிலால் தூக்கிட்டுத் தற்கொலை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை

#BanNEET | #BanNEET_SaveTNStudents September 12, 2020 at 09:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், ஏப்ரல் - மே மாதத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கும் வரும் 22 முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. https://t.co/vx3rMxFNN8 September 12, 2020 at 10:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது நீட் தேர்வு

பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நடைபெறும் நீட் தேர்வுக்கு
அரசு வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்டன் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதி

இடம்: ஆசான் பள்ளி சென்னை
#NEET2020 https://t.co/ZKEQkNMmau September 13, 2020 at 10:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)