நேற்றைய என் பிறந்தநாள் சற்று வேறுபட்டிருந்தது! தோழர் காசு. நாகராசன் தலைமையில் பேரவைத் தோழர்கள் காட்டிய அன்பு, கோவைத் தெருக்களில் சுவரொட்டிகளாய், ஒவ்வொரு வேளையும் உணவில் பெருவிருந்தாய், கொள்கை உறுதியாய், மாநாட்டு நிதியாய், பல திசைகளில் பரவி நின்றது!
வெளியூர்களில் இருந்தும், சில வெளிநாடுகளில் இருந்தும், குடும்பத்தினரிடமிருந்தும், கொள்கையாளர்கள் - நண்பர்களிடமிருந்தும், நேரில் - தொலைபேசியில் - சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் வந்து கொண்டே இருந்தன!
தனித்தனியாய் நன்றி கூற இயலவில்லை. உங்கள் அனைவரின் அன்பிலும் மகிழ்ந்து, தொடர்ந்து உழைப்பேன் என்பதே நான் காட்டும் நன்றியாக இருக்கும்! நன்றி!!